"கணினி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கேட்கும் அளவு,
மடிக்கணினிகளை வினியோகம் செய்யும் சக்தி இல்லாததால், மாணவர்களுக்கு
மடிக்கணினி, படிப்படியாகச் வினியோகம் செய்யப்படுகிறது" என, முதல்வர்
ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் நேற்று நடந்த உயர்
கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பார்த்திபன் (தே.மு.தி.க.,)
கோ.வி.செழியன் (தி.மு.க.,) ஆகியோர், "கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், போராட்டங்கள் நடக்கின்றன" என,
குறிப்பிட்டனர்.
இதற்கு, பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க, தைவான் நாட்டில் உள்ள நிறுவனத்திடம்,
ஒப்பந்தம் செய்யப்பட்டது. தைவான் நாட்டில் பெய்த கடும் மழையால், கணினி
நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால், உற்பத்தி
பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மடிக்கணினிகள் எதிர்பார்த்த அளவு
கிடைக்கவில்லை.
தமிழக அரசைப் பொறுத்தவரை, ஒரே நேரத்தில், அனைத்து மாணவர்களுக்கும்
மடிக்கணினியை வழங்க விரும்புகிறது. இதற்கு, தேவைப்படும் மடிக்கணினிகளை
வினியோகம் செய்யும் அளவுக்கு, கணினி உற்பத்தி நிறுவனங்களுக்கு சக்தியில்லை.
இதனால், படிப்படியாக ஆர்டர்கள் கொடுத்து, மடிக்கணினிகளைப் பெற்று,
மாணவர்களுக்கு வழங்குகிறோம்.
இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment