மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மத்திய அரசின் பொதுத்துறை
வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை
நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
உதவி பொதுமேலாளர், முதன்மை மேலாளர், முதுநிலை மேலாளர்,
சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகள் 349 1.02.2013 தேதியின் அடிப்படையில் உதவி
மேலாளர் பணிக்கு 21 - 45 வயதும், முதன்மை மேலாளர் பணிக்கு 43 வயதுக்கு
உட்பட்டவர்களும், முதுநிலை மேலாளர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும்,
கிரெடிட் ஆபீசர் பணிக்கு பணிக்கு 21 - 40 வயதும், 'பிரின்டிங்
டெக்னாலஜிஸ்ட்' பணிக்கு 21 - 40 வயதும், செக்யூரிட்டி ஆபீசர் பணிக்கு 50
வயதும், கம்பெனி செக்ரெட்டரி பணிக்கு 35 வயதும், எக்னாமிஸ்ட் பணிக்கு 35
வயதுடையோர் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து அதிகாரி பணிக்கும் குறைந்தபட்சம்
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிவாரியான கல்வித்தகுதியை
இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும். எழுத்து தேர்வு, குழு விவாதம்,
உற்றுக் கவனிக்கும் ஆற்றல் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் இவற்றில்
ஏதேனும் ஒரு முறைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.பொது
மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.250. மற்றவர்கள் ரூ.50 இதனை இணையதள செலான்
மூலம் யூனியன் வங்கியின் ஏதாவதொரு கிளைகளில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க
விருப்பம் உள்ளவர்கள் www.unionbankofindia.com என்ற இணையத்தின் மூலம்
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பித்த விவரங்களை கணினிப்
பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நேர்காணலுக்கு செல்லும்போது அதனை
எடுத்து செல்ல வேண்டும்.03.04.2013 முதல் 23.04.2013 வரை 23.04.2013மேலும்
முழுமையான விவரங்கள் அறிய www.unionbankofindia.com என்ற இணையதளத்தைப்
பார்க்கவும்.
No comments:
Post a Comment