டாடா சமூக அறிவியல் கல்வி நிலையம் இளைஞர்களின் மன நிலையை
அறிந்து கொள்வதற்காக "இளம் இந்தியா" என்ற ஆய்வை இளைஞர்களிடையே
மேற்கொண்டது. இந்த ஆய்வில், மும்பை பகுதியைச் சேர்ந்த 250 இளைஞர்களும்,
டில்லி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுமாக மொத்தம் 500 இளைஞர்கள்
கலந்துகொண்டனர்.
இந்த ஆய்வுக்கு தலமை வகித்த டாடா சமூக அறிவியல் கல்வி நிலையத்தின் டாக்டர் டி.பி. சிங் ஆய்வு குறித்து கூறியதாவது:
"கடந்த தலைமுறையைக் காட்டிலும் அதிக வித்தியாசத்தை இந்தத்
தலைமுறையினரிடம் காணமுடிகிறது. இளைஞர்கள் கடுமையாக உழைக்கத் தயாராக
இருக்கிறார்கள், அதனோடு அவர்களுக்கு ஏராளாமான வாய்ப்புகளும் உள்ளது.
அவர்கள் புதிய வேலைக்கு செல்லும்பொழுது விரைவாக அந்த வேலையோடு
ஒன்றிவிடுகிறார்கள்.
பெற்றோர்களை ஒப்பிடும்பொழுது, பிள்ளைகள் மிக விரைவாகவே
நிறுவனத்தை மாற்றிவிடுகின்றனர். "வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு
உண்மையுள்ளவர்களாக இவர்கள் இருப்பதில்லை" என்ற எண்ணம் வேலை கொடுக்கும்
நிறுவனங்களுக்கு இருக்கிறது. குறிப்பாக மென்பொருள் மற்றும் பி.பி.ஓ.
நிறுவனங்களில் இருப்பவர்கள் 2 வருடங்களுக்கு மேலாக ஒரு நிறுவனத்தில் வேலை
பார்ப்பதில்லை.
இன்றைய இளைஞர்கள் சேமிப்பதைவிட செலவழிப்பதையே
விரும்புகிறார்கள். வேலைக்கு அடுத்ததாக தான் வாழ்க்கை என்ற நடைமுறை மாறி,
முதலில் வாழ்க்கை அடுத்து தான் வேலை என்ற மனோபாவம் அதிகரித்துள்ளது."
என்றார்.
No comments:
Post a Comment