டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் தேர்வாணையம் மீண்டும்
மாற்றம் செய்துள்ளது. மாற்றப்பட்ட பாடத்திட்டங்களுள் குரூப் 4 மற்றும்
கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான மாற்றம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன் படி பொதுத்தமிழுக்கான கேள்விகளின் எண்ணிக்கை
அதிகரிக்கப்பட்டுள்ளது.பொது அறிவு, திறனறிக் கேள்விகளின் எண்ணிக்கை
குறைக்கப்பட்டு பொதுத்தமிழ், பொது ஆங்கிலத்திற்கான கேள்விகள்
அதிகரிக்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு முறையிலும்
பொது அறிவு, கிராம நிர்வாகம் குறித்த கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு
பொதுத் தமிழ், பொது ஆங்கிலத்திற்கான கேள்விகள்
அதிகரிக்கப்பட்டுள்ளன.
பொதுத்தமிழுக்கான தேவையைவிட பொது அறிவுக்கான தேவையே
அதிகம் என்பதால் மாற்றத்தை ஏற்படுத்தியதாக கடந்த முறை மாற்றம் செய்யும்போது
தெரிவித்திருந்தது தேர்வாணையம். இதேபோல் பெரும்பாலான தேர்வுகளின்
பாடத்திட்டத்திலும் மாற்றங்கள் இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் நாளை
அறிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி
தேர்வாணையம், கடந்த மாதம் சில மாற்றங்களை செய்திருந்தது. அதில் பொதுத்
தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு
தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இந்த சூழலில் மீண்டும்
பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment