அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம், பள்ளி
விடுதி மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் அரசு, உதவி பெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு
மாணவிகளுக்கு கல்வித் திறனை வளர்த்தல், இடைநின்றல் தவிர்த்தல், தேர்ச்சி
விகிதம் அதிகரித்தல், கூடுதல் வகுப்பறை கட்டுதல் போன்ற பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டில், இத்திட்டம் மூலம் கம்ப்யூட்டர் பயிற்சி;
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி மையங்களை ஏற்படுத்தி, அவர்களின் கல்வி
தரத்தை உயர்த்துதல்; வாழ்க்கை கல்வி முறையை கற்று கொடுத்தல்; மனதை
ஒருநிலைப்படுத்த, மாணவிகளுக்கான விடுதிகளில், மாதம் ஒருமுறை கவுன்சிலிங்
நடத்துதல் போன்ற பணிகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திட்ட அலுவலர்கள் கூறுகையில், "ஆண்டுதோறும் மாற்றங்கள் கொண்டு
வருவதுபோல், இவ்வாண்டு, 4 புதிய பணிகளை செய்ய உத்தரவிட்பட்டு உள்ளது.
இதற்கான நிதி கிடைத்ததும், பணியை செய்வோம்" என்றார்.
No comments:
Post a Comment