புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள், மே 30க்குள் அங்கீகாரம் பெறுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் நர்சரி பள்ளிகள், ஜூன் மாதம் துவங்குகிறது;
ஏப்., துவக்கத்தில் இருந்து, மே இறுதி வரை நர்சரி பள்ளிகளில் குழந்தைகள்
சேர்க்கை நடக்கிறது. மாணவர் சேர்க்கையில் "பிஸி"யாக உள்ள பள்ளிகள், அதிக
வேலைப்பளு காரணமாக, பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்க தவறும் வாய்ப்புள்ளது.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக துவங்கப்படும்
நர்சரி பள்ளிகள்; மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து புதுப்பிக்க தவறிய நர்சரி
பள்ளிகள் வரும் மே 30க்குள், அங்கீகாரத்தை பெற வேண்டும்.
அங்கீகாரம் பெறவோ, புதுப்பிக்கவோ தவறும் பட்சத்தில், நர்சரி
பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, கல்வித்துறை அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment