விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம், கடலூர் மாவட்டம், விருத்தாசலம்
பகுதியில் ஏற்பட்ட, விடைத்தாள் குளறுபடிகளுக்கு காரணமான, தபால்
ஊழியர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 45 நாட்களாக, தமிழ்நாடு தபால் மையம், 10 ம்வகுப்பு, பிளஸ் 2
மற்றும் சி.பி.எஸ்.சி., மாணவர் தேர்வுக்கான, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
தேர்வு விடைத்தாள் பார்சல்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டது.
தமிழகம் முழுவதும், அனைத்து புறநகர் மற்றும் கிராம பகுதியில் இருந்து
பெறப்பட்ட விடைத்தாள்களை, விடைத் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைத்தது.
அதில், சத்தியமங்கலத்தில் பதிவு செய்யப்பட்ட, ஒரு பார்சல் காணாமல் போன
சம்பவமும், விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில், ஏற்பட்ட விபத்தில், 65
விடைத்தாள்கள் சேதமடைந்த சம்பவமும் நடந்துள்ளன.
இந்த இரண்டு சம்பவத்திற்கும், பொறுப்பான அனைத்து தபால் ஊழியர்களும்,
தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது, கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடுமையான பணிகளுக்கிடையே, தபால் ஊழியர்கள்
தன்னலமற்ற சேவை புரிந்து வருகின்றனர்.
இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாது என, தபால் துறை உறுதியளித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment