டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு,
இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம் மாதம் 29ம் தேதி கவுன்சிலிங்
நடக்கிறது.
கடந்த 2012 ஜூலையில், 10 ஆயிரத்து
500 இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர், சுருக்கெழுத்தர் காலி
பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. தேர்வு நடந்த பின், கடந்த ஆண்டு
டிசம்பரில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், வெளியிடப்பட்டது. அதே
மாதத்தில் கலந்தாய்வு நடந்து, நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்தனர்.
ஏற்கனவே அரசு பணியில் உள்ளோரும், இந்த தேர்வில் வெற்றிபெற்றனர்.
அவர்களுக்கு விரும்பிய துறை கிடைக்காததால், அவர்கள் இந்த பணியில்
சேரவில்லை. இதுபோல் 597 பணி இடங்கள், பணி நியமனம் செய்யப்படாமல் இருந்தது.
இந்த பணியிடங்களுக்கு, 2012 ல் டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுதியோர்
பட்டியிலில் இருந்து, மேலும் 597 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கு, இம் மாதம் 29 ல், சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில்
பணிநியமன கவுன்சிலிங் நடக்கிறது.
தேர்வில் வெற்றி பெற்று மறு கவுன்சிலிங் அழைக்கப்பட்டு, துறை ஒதுக்கீடு
பெறாமல் காத்திருப்பில் உள்ள 150 பேரின் நிலை குறித்து இது வரை தகவல்
வெளியாகவில்லை.
No comments:
Post a Comment