"பட்டம் பெற்றவர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும்" என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ பேசினார்.
மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பட்டமளிப்பு
விழா செயலாளர் விஜயராகவன் தலைமையில் நடந்தது. மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ,
பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு உயர்கல்வி மிக அவசியம். இந்தியாவில்
23 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கின்றனர். இது 96 சதவீதம்தான்.
விரைவில் அது 100 சதவீதத்தை எட்டிவிடும். இந்தியாவில் உயர்கல்வியின்
வளர்ச்சி 18.8 சதவீதம் மட்டுமே. இந்த ஆண்டு 30 சதவீதமாக உயர்த்த
திட்டமிட்டுள்ளோம்.
தொழில் சார்ந்த கல்வி அவசியம். போட்டிகள் நிறைந்த
இவ்வுலகில் மாணவர்கள் தொழில்நுட்ப திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பட்டம் பெற்றவுடன் பிறரிடம் வேலைக்கு செல்வதை தவிர்த்து, தொழில் தொடங்கி
பலருக்கு வேலை கொடுக்க முன்வரவேண்டும். நாட்டின் பொருளாதாரம் விரைவான
வளர்ச்சிக்கு உதவும், என்றார்.
No comments:
Post a Comment