உலகமயப் பொருளாதாரம் இந்தியாவுக்குள் என்று
அடியெடுத்து வைத்ததோ அன்றிலிருந்து கல்வி என்பது கட்டுப்பாடற்ற ஒரு பெரு
வணிகமாக மாறிவிட்டது. மழலையர் பள்ளிகளில் தொடங்கி தனியார் பல்கலைக் கழகம்
வரை இது படு ஜோராக நடந்து வருகிறது.
கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை இன்று 75 சதவீதம் வரை வளர்ந்துள்ளது. உயர் கல்வியில் இந்தியா உலகிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 654 பல்கலைக் கழகங்கள், 34,000 கல்லூரிகள், 10,000 பட்டயப் படிப்புகள் தரும் சிறிய நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து 1.80 கோடி மாணவர்களுக்கு உயர் கல்வி கொடுத்து வருகின்றன.
12-ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 2.50 கோடி மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்கவும் அதற்கு ஏற்றபடி நிறுவனங்கள் எண்ணிக்கையில் உயர வேண்டும் என்றும் மைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த அசுர வேகம் வேறு எந்த நாட்டிலும் காண முடியவில்லை என்று பார்க்கும்போது இது நமது பெரிய சாதனை.
ஆனால், இந்த வேகமான வளர்ச்சி என்பது வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நம் உயர் கல்வி நிறுவனங்கள் சந்தைக்கும் சமூகத்திற்கும் தேவையானவர்களை, தேவையான அளவுக்கு உருவாக்கவில்லை. அதுமட்டுமல்ல, தேவையான ஆற்றலுடனும் திறனுடனும் உருவாக்கவில்லை.
ஒரு பொறியியல் கல்லூரியில் ஒரு பட்டதாரியை உருவாக்கும்போது அவருக்குத் தேவையான எண்ணிக்கையில் உதவியாளர்களை உருவாக்கத் தவறிவிட்டோம். ஒரு மருத்துவரை உருவாக்கும்போது அவருடன் பணிசெய்யத் தேவையான உதவியாளர்களை உருவாக்கத் தவறிவிட்டோம். ஒவ்வொரு துறையிலும் இந்த நிலையிலிருந்து மாற்றமில்லை என்பது அதிரவைக்கும் உண்மை.
அதேபோன்று தொழில்துறைக்குத் தேவையான தகுதி வாய்ந்த, திறன் வாய்ந்த மாணவர்களை உயர் கல்வி நிறுவனங்களால் உருவாக்கித்தர முடியவில்லை என்று தொழில் துறை கூட்டமைப்புகள் கூறுகின்றன.
ஆனால், உயர் கல்வி நிறுவனங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தொடர்ந்து வியாபார, விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி மாணவர்களைச் சேர்த்து பட்டங்களை வாரி வழங்கிக்கொண்டே இருக்கின்றன.
2015-இல் நம் நாட்டில் 8 சதவீதம் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமேயானால் தொழில் துறைகளுக்கும் சேவைத் துறைகளுக்கும் தேவையான தொழில் திறன் வளர்க்கப்பட்ட பணியாளர்கள் 500 மில்லியன் பேர் தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், 150 மில்லியன் பணியாளர்களை மட்டும் உருவாக்கக்கூடிய அளவில்தான் நம்மிடம் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. மீதமுள்ள 350 மில்லியன் பணியாளர்களை உருவாக்க வேண்டும். இதற்கான தயாரிப்பு ஆமை வேகத்தில்தான் நடந்து வருகிறது.
சில தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான பணியாளர்களை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்று பல்வேறு தனியார் நிறுவனங்கள் உருவாக வேண்டும். அவைகளை முறைப்படுத்த அரசு உதவிட வேண்டும். ஜெர்மன் நாட்டில் பள்ளியிலேயே இரட்டை முறை தொழிற்கல்வியைத் தந்து வேலைகளுக்குத் தேவையான பணியாளர்களை உருவாக்கி விடுகின்றனர். அமெரிக்காவில் சமுதாயக் கல்லூரிகள் தொழில் துறைக்கும், சேவைத்துறைக்கும் தேவையான எண்ணிக்கையில் தரமான பணியாளர்களை உருவாக்கிக் கொடுக்கிறது.
இதுபோன்ற திட்டமிட்ட பணி சரியாகவும் செறிவாகவும் நடந்தால் நமக்குத் தேவையான பணியாளர்களைத் தேவைக்கேற்பவும் திறனாகவும் தயாரிக்க முடியும். அப்படித் தயாரித்தால். நம் பொறியியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறுகின்றவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நம் உயர் கல்விக் கூடங்கள் சந்தைக்கும் சமூகத்திற்கும் தேவையான பணியாளர்களை உருவாக்க முடியவில்லை. இதற்கு முக்கியமான காரணம் தமது பணிகளை ஒருங்கிணைத்துச் செய்வதில்லை. ஆராய்ச்சி செய்தல், அதிலிருந்து வரும் உண்மைகளை பாடத்திட்டங்களாக மாற்றம் செய்து மாணவர்களுக்குக் கற்பித்தல், ஆராய்ச்சியின் பயன்களை நேரடியாகச் சமுதாயத்துக்கு எடுத்துச் செல்லுதல் - இவற்றை ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.
இந்தப் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் உயர் கல்வி நிலையங்கள் நமது நாட்டில் மிகக் குறைவு. பெரும்பாலான நிலையங்கள் இவற்றில் ஒன்றோ, இரண்டோ மட்டும் செயல்படுத்துகிறது. நடத்திய பாடத்திற்கும் சமூகத்திற்கும் தொடர்பே இல்லாத அவலநிலை பல நிலையங்களில் இருப்பதைக் காண முடிகிறது.
நிறுவனங்களுக்கு அவர்கள் தேடும் பணியாளர்கள் கிடைக்கவில்லை. மாணவர்களுக்கு அவர்கள் வாங்கிய பட்டத்திற்கு வேலை கிடைக்கவில்லை.
எனவே உயர் கல்வி நிலையங்கள் தரும் கல்வியை நாம் சமூகத் தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

No comments:
Post a Comment