தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.,) பிடித்தத்தில், தொழிலாளர்களுக்கு
வழங்கப்படும், பிற படிகளும் சேர்க்கப்பட உள்ளன.
இதனால், தொழிலாளர்களின்
சேமிப்பு தொகை உயர வாய்ப்பு உள்ளது.தனியார் நிறுவனங்களில்
பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் மாதச்சம்பளத்தில், அடிப்படை சம்பளம்
மற்றும் அகவிலைப்படியில், குறிப்பிட்ட சதவீதம் மட்டும், தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. அதனுடன், ஒவ்வொரு தொழிலாளி
கணக்கில், முதலாளிகளும், மாதம்தோறும் குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்த
வேண்டும்.பணி ஓய்வு பெறும் போதோ, பணியிலிருந்து விலகும் போதோ, அந்தத் தொகை,
தொழிலாளருக்கு வழங்கப்படுகிறது. அடிப்படை சம்பளம் மற்றும்
அகவிலைப்படியில், குறிப்பிட்ட சதவீதம் மட்டும் பிடித்தம் செய்யப்படுவதால்,
தொழிலாளர்களின் வருங்கால சேமிப்பு தொகை குறைவாக இருக்கிறது; அதை உயர்த்த
வேண்டும் என்ற கோரிக்கை நிலவியது.""அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி
தவிர, பிற படிகளும் சேர்த்து வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம்
செய்யப்படும் முறை, விரைவில் பின்பற்றப்பட உள்ளது,'' என, இ.பி.எப்.,
டிரஸ்டின் உறுப்பினர்களில் ஒருவரான, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் செயலர்,
பி.என்.ராய் தெரிவித்துள்ளார்.இ.பி.எப்., டிரஸ்ட் உறுப்பினர்களின்
கோரிக்கை, மத்திய தொழிலாளர் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த
நடைமுறை அமலுக்கு வந்தால், தொழிலாளர்களின் சேமிப்பு உயரும் என்பதால்,
தொழிலாளர்கள் வட்டாரத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment