திண்டுக்கல்லில் தினமலர் சார்பில் நடந்த "வழிகாட்டி" நிகழ்ச்சியில்
"வேலைக்காக தயாராவது எப்படி" என்ற தலைப்பில், இன்போசிஸ் கம்பெனியின் மனிதவள மேம்பாட்டு பிரிவு தலைவர் சுஜித்குமார் பேசியதாவது:
"வேலைக்காக தயாராவது எப்படி" என்ற தலைப்பில், இன்போசிஸ் கம்பெனியின் மனிதவள மேம்பாட்டு பிரிவு தலைவர் சுஜித்குமார் பேசியதாவது:
பிளஸ் 2ல் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் தான் உயர்கல்வியிலும் நல்ல
படிப்புக்களை தேர்வு செய்ய முடியும். வெற்றி என்பதை நமது மனதில் நாமே
நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு படிப்புக்கு சம்பந்தமில்லாமல்
வேலையில் பலர் உள்ளனர்.
வாழ்க்கைக்கான துறை, வாழ்க்கை துணை இரண்டையும் தேர்வு செய்வதில்தான்
எதிர்கால வாழ்வு அமையும். 30 வயது வரை "ரிஸ்க்" எடுக்க தயங்கக் கூடாது.
மாணவர்கள் எந்த படிப்பை திறமையாக வெளிப்படுத்த முடியுமோ அந்த படிப்புக்களை
தேர்வு செய்யுங்கள். நம்முடைய கல்வி முறை மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை
சோதிப்பதாக உள்ளது.
தற்போது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, மாணவரின் பட்டப்படிப்பு வேலைக்கான
தகுதி மட்டுமே. அங்கு மாணவர்களின் தனித்திறமைகளுக்கு தான் முன்னுரிமை
கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஏதாவது ஒரு தனித்திறமை
மறைந்திருக்கும். அதை வெளிக்கொண்டு வரவேண்டும்.
மொழித்திறன், ஆங்கில தகவல் தொடர்பு, ஆளுமை பண்பு, தலைமைப் பண்பு, குழு
விவாதத் திறன் போன்ற திறமைகளை மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே
வளர்த்துக்கொள்ள வேண்டும். இது எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பிற்கு
உதவும். உயர்கல்வியை தேர்வு செய்வதில் பெற்றோரின் கனவுகளை பிள்ளைகளிடம்
திணிக்கக் கூடாது, என்றார்.
No comments:
Post a Comment