"உலகத்தரம் வாய்ந்த முதல் நிலை விளையாட்டு மையத்தில் சேர
மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக," விளையாட்டு அலுவலர்
ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: உலகத்தரம் வாய்ந்த முதல்நிலை விளையாட்டு
மையத்தில் சேர மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 6
முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மாநில அளவில்
தேர்வு நடக்கும். உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி, விளையாட்டு பயிற்சி
இலவசம். தடகளம், இறகு பந்துக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.
6ம் வகுப்பில் சேர, 5ம் வகுப்பில் தேர்ச்சிபெற்று, 11 வயது
முடிந்திருக்கவேண்டும். 7ம் வகுப்பிற்கு வயது 12, எட்டாம் வகுப்பிற்கு வயது
13 முடிந்திருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, உறுப்பினர்
செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116ஏ, ஈ.வெ.ரா., சாலை,
சென்னை- 84,க்கு ஏப்.,25க்குள் அனுப்பி வைக்கவும், என்றார்.
No comments:
Post a Comment