"குரூப்-1 தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை, 35ல் இருந்து, 45ஆக
அதிகரிப்பது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்,''
என, அமைச்சர் முனுசாமி கூறினார்.
குடியரசு கட்சி -செ.கு.தமிழரசன்: கேரளாவில்
கூட, குரூப்-1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு, 45 ஆகத் தான் உள்ளது.
சென்னை மாநகராட்சியில், 57 வயதுள்ள ஒருவருக்கு, தட்டச்சர் வேலை கிடைத்ததாக,
இன்று செய்தி ("தினமலர்' நாளிதழில், நேற்று முதல் பக்கத்தில் வெளியான
செய்தி) படித்தேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, படிப்பு ஒன்று தான், துணையாக
உள்ளது. அவர்கள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு வசதியாக, வயது
வரம்பை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித்துறை அமைச்சர்
முனுசாமி: உங்களது
கோரிக்கை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். முதல்வர்,
பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார். இவ்வாறு விவாதம் நடந்தது. வயது
வரம்பை உயர்த்துவது குறித்து, தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகையில், "அரசு
உத்தரவிட்டால், வயது வரம்பை உயர்த்துவதற்கு தயாராக உள்ளோம்' என,
தெரிவித்தன.
No comments:
Post a Comment