பி.காம்., பி.பி.ஏ. மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்
பாடங்களில் தமிழ் பாடத்தை சேர்க்க கல்வி சார் கூட்டத்தில் உறுப்பினர்கள்
எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என துணைவேந்தர்
குமரகுரு பதிலளித்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் 39வது கல்வி
நிலைக்குழு கூட்டம் நடந்தது. துணைவேந்தர் குமரகுரு தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சுயநிதி கல்லூரிகளில் முறையான ஆசிரியர்கள் உள்ளனரா.
அவர்களுக்கு முறைப்படி சம்பளம் வழங்கப்படுகிறதா. பெண் ஆசிரியர்களுக்கு
மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறதா என அஜிந்திரநாத், சன்னல், கண்ணன்
ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
நெல்லை பல்கலை., வரும் கல்வியாண்டு முதல் பி.காம்.,
பி.பி.ஏ. மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் தமிழ் பாடத்தை சேர்க்க
முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு அமுதன், ஜோசப் ராஜ் உள்ளிட்டோர்
எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோல் பல்கலை., வகுப்புகளில் மாணவர்களின்
எண்ணிக்கையை குறைக்கும் பல்கலை.,யின் முடிவுக்கும் உறுப்பினர்கள் சிலர்
எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு துணைவேந்தர் குமரகுரு பதிலளித்து பேசியதாவது:
சுயநிதி கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு அரசு விதிமுறைப்படி சம்பளம் வஙழ்க வேண்டும் என பல்கலை., தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அது முறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
சுயநிதி கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு அரசு விதிமுறைப்படி சம்பளம் வஙழ்க வேண்டும் என பல்கலை., தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அது முறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
பிகாம்., பிபிஏ., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்
மாணவர்களுக்கும் தமிழ் பாடத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால்
முக்கிய பாட நேரங்களின் எண்ணிக்கை குறையும் என்றும், இதனால் அந்த
மாணவர்களின் கல்வித்தரம் குறையும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு
செய்யப்படும்.
ஆராய்ச்சியை ஊக்குவிக்கவே கல்வி நிறுவனங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. எனவே பட்ட மேற்படிப்புகளில் 16 மாணவர்களை மட்டுமே
சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும். மாணவர்களின்
எண்ணிக்கையை குறைப்பதனால் உயர்கல்வி பயின்றோர் எண்ணிக்கையை அதிகரிக்க
முடியுமா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்தும் ஆலோசனை
செய்யப்படும்.
மேலும் மனோதத்துவ பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க
வேண்டும் என சில பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மனோதத்துவ
பாடங்கள் தற்போது மாணவர்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.
இதுகுறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு துணைவேந்தர் குமரகுரு
பேசினார்.
No comments:
Post a Comment