ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான அரசு ஊழியர்கள், ஓய்வு
பெறும் வயதை எட்டினால், அவர்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் இருப்பதை
குறிப்பிட்டு, அதற்கான ஒப்புகை படிவத்தில் எழுதி வாங்கிக் கொண்டு ஓய்வு பெற
அனுமதிக்கப்படும். இதனை , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை,
மற்ற துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அரசுத் துறைகளில்
பணியாற்றும் ஊழியர்களுக்கென, தனியான நிர்வாக விதிகள் வகுக்கப்பட்டு, அவை
கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கென, பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்திருத்தத் துறை என, தனியான துறையே செயல்பட்டு வருகிறது. இந்த துறையின்
சார்பில், அரசின் முடிவுகளுக்கேற்ப விதிகளில் அவ்வபோது, சில மாற்றங்களும்
செய்யப்படுகின்றன. தவறு செய்த ஒரு அரசு ஊழியர் மீது, நடவடிக்கை
எடுக்கப்பட்டு, அவரது தவறு தொடர்பான விசாரணை நடந்து, இறுதி உத்தரவு
வருவதற்குள், ஒரு வேளை அந்த ஊழியரின் ஓய்வு வயது எட்டினால், அவர் ஓய்வு
பெறலாம். ஆனால், அவருக்கு சேர வேண்டிய ஓய்வுப் பயன்கள் அனைத்தும், நிறுத்தி
வைக்கப்படும். ஓய்வு பெற்றவர், தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து
விடுபடும் பட்சத்தில், ஓய்வூதியப் பயன்களை பெற தகுதியானவராகிறார்.
இந்நிலையில்,
2010ம் ஆண்டு, ஐகோர்ட் மதுரை பெஞ்ச் அளித்த உத்தரவின் படி, புதிய
நடைமுறையை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அறிவித்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைக்குட்பட்ட நபர், ஓய்வு பெறும் வயதை எட்டும் போது, அவர்
மீது, பணி நீக்கம், கட்டாய ஓய்வு போன்ற கடும் நடவடிக்கைகள் இருந்தாலன்றி,
அவரது ஓய்வை நிறுத்தி வைக்காமல், உரிய ஓய்வு உத்தரவை அளிக்க வேண்டும் என,
அத்தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், நிலையான மாதிரி
படிவம் ஒன்றையும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, மற்ற
துறைகளுக்கு வழங்கியுள்ளதுடன், இதை கண்டிப்பாக வழங்க வேண்டும் என
அறிவுறுத்தியுள்ளது. இப்படிவத்தில், ஓய்வு பெறும் பணியாளர், தன் மீதான
புகார் குறித்த முழு விவரங்களையும், ஒப்புகை படிவமாக தர வேண்டும்.
ஒய்வு பெறும் போது பெறும் பண பலன்களைப் பெற முடியுமா
ReplyDelete