தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 2013-14 ம் ஆண்டின்
மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை முதல் தேதி துவங்குகிறது.
இக்கல்வியாண்டில் 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை
துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.
பல்கலை துணைவேந்தர் ராமசாமி
நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பல்கலையில் சேர்வதற்காக
மாணவர்களின் மத்தியில் கடும் போட்டிகள் நிலவுகிறது. மாணவர்களின் நலன் கருதி
தற்போது 12ம் ஜந்தாண்டு திட்டத்தின் கீழ் பல்கலை அரசு கல்லூரிகளில் 10
சதவீதம் மாணவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மேலும், இந்தாண்டு
முதல் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற பாடத்தை தேர்வு செய்து படிக்க
20 முதல் 30 சதவீத வாய்ப்புகள் வழங்கப்படும். பல்கலையின் கீழ் செயல்படும்
கல்லூரிகள் அனைத்திலும் ஒரே விதமான வசதிகள், பாடத்திட்டங்கள், சோதனை கூடம்
செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாணவர்கள் வெளி
மாநில வேளாண் கல்லூரிகளில் ஒரு பருவம் முதல் நான்கு பருவங்கள் வரை பயில
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களின்
வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவிகரமாக அமையும். 2013-14ம் ஆண்டிற்கான
மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் மே மாதம் 6ம் தேதி முதல்
இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, துணைவேந்தர் ராமசாமி கூறினார்.
வேளாண்
பல்கலையில் மாணவர்களின் வசதிக்காக இக்கல்வியாண்டு முதல் இணையதளம் மூலம்
விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.tnau.ac.in என்ற
இணையதளத்தில் வரும் மே 6ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தினை ஆன்-லைன் வழியே பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனுடன்
தேவையான சான்றிதழ்களை இணைத்து முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர்(மாணவர்
சேர்க்கை), தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை 641003 என்ற முகவரிக்கு
அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0422-6611345/6611346 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு
வேளாண்மை பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டு முதல் ஒரே பாடத்திட்டம்,
ஆசிரியர்களின் தரம், வகுப்பறைகள், ஆய்வுக்கூட வசதிகள் இருக்கும்.
ஆய்வுகளில் வசதிகள் குறைபாடுகள் இருந்த கல்லூரிகளுக்கு அதனை நிவர்த்தி
செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள
காலஅவகாசத்திற்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்படாத பட்சத்தில் இந்தாண்டு
மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்படும் என்று துணைவேந்தர் ராமசாமி
தெரிவித்தார்.
கலந்தாய்வு விபரம்
1. இணையதள விண்ணப்பம் துவங்கும் தேதி மே - 6
2. பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற கடைசி தேதி ஜூன் - 7
3. தரவரிசை பட்டியல் வெளியீடு தேதி ஜூன் -17
4. முதல்கட்ட கலந்தாய்வு (சிறப்பு ஒதுக்கீடு) தேதி ஜூலை 1 முதல் 8 வரை
5. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி ஜூலை 15 மற்றும் 16
6. கல்லூரி துவக்கம் தேதி ஜூலை -25
No comments:
Post a Comment