படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
ஏப்., 20ம் தேதி, ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
நடைபெறுகிறது.
கோவையில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் மூலம்
நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள்
முதல் பட்டதாரிகள் வரை தேர்வு செய்யப்படவுள்ளனர். ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ
தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்கலாம். மாத சம்பளம் 6000 ஆயிரம் ரூபாய்.
உணவு, தங்குமிடம் இலவசம்.
விருப்பமுள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றுகளுடன்
ஏப்., 20ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 10
முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம். தனியார்
நிறுவன வேலைக்கு சென்றால் வேலை வாய்ப்பு பதிவு எவ்விதத்திலும் ரத்து
செய்யப்படமாட்டாது என, மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment