தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160
விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும்
இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சு திறனை வளர்க்க, ஆங்கில பேச்சு
பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
முடிவு செய்தது.
இதற்காக, ஒரு மாணவருக்கு,
ரூ.2,800 வீதம், 6, 500 பேருக்கு, 1.83 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க,7 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை,
ஜூன் மூன்றாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகளை துவக்கும் என, அதிகாரிகள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment