அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், அரசு சார்பில் முதன்மை
கணக்கு அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் நேற்று பொறுப்பேற்றனர்.
சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நிதி நெருக்கடி உள்ளிட்ட நிர்வாக குளறுபடியால்
அரசு சார்பில், நிர்வாக சிறப்பு அதிகாரியாக, ஷிவ்தாஸ் மீனா
நியமிக்கப்பட்டார். பின், நிர்வாக சிறப்பு அதிகாரிக்கு உதவியாக, துணை
நிர்வாக அதிகாரி பொறுப்பில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிறிஸ்து ராஜ்
ஆகியோர், கடந்த வாரம் பொறுப்பேற்றனர். அதைத் தொடர்ந்து, முதன்மைக் கணக்கு
அதிகாரியாக, திருவள்ளுவர் மாவட்ட கருவூல அதிகாரி ரவிச்சந்திரன், கணக்கு
அதிகாரியாக, கடலூர் கலெக்டர் கணக்குப் பிரிவு நேர்முக உதவியாளர் சீனிவாசன்
ஆகியோர் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றனர்.
No comments:
Post a Comment