திருப்பாச்சேத்தி அருகே, ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக
கூறி, மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவர், கைது
செய்யப்பட்டார்.
திருப்பாச்சேத்தி அருகே உள்ள தஞ்சாக்கூரை சேர்ந்தவர்
செந்தில் குமரன், 36. இவர், அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி
பெறவில்லை. இதை அறிந்த, ஆவரங்காடு முனியாண்டி, 46; செந்தில்குமாரை அணுகி,
"தமிழக முதல்வரின் உதவியாளரை எனக்கு தெரியும். ரூ. 4 லட்சம் பணம்
கொடுத்தால், ஆசிரியர் வேலை வாங்கி தருவேன்," எனக் கூறியுள்ளார்.
இதை நம்பிய செந்தில்குமரன், முன்பணமாக, செப்., 2012 ல், ரூ.
3.25 லட்சம் கொடுத்துள்ளார். அதன்பின், பல மாதமாகியும் வேலை
கிடைக்கவில்லை. செந்தில்குமரன், முனியாண்டியிடம் பணத்தை கேட்டபோது,
முனியாண்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செந்தில்குமரன், மானாமதுரை டி.எஸ்.பி.,
வெள்ளத்துரையிடம் புகார் செய்தார். அவரது உத்தரவுபடி, திருப்பாச்சேத்தி
எஸ்.ஐ., துரைசிங்கம், வழக்குபதிந்து முனியாண்டியை, நேற்றிரவு கைது
செய்தார். முனியாண்டி, ஏற்கனவே, கந்துவட்டி, மோசடி வழக்கில் கைதானவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment