சென்னை பல்கலைக்கழக முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இன்று
(3ம் தேதி) வெளியாகிறது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள
அறிக்கை:
சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல்
மாதம் நடத்திய எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்சி., - எம்.பி.ஏ., -
எம்.எஸ்.டபிள்யூ., உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள்,
இன்று வெளியாகிறது. www.unom.ac.in, www.kalvimalar.com ஆகிய இணையதளங்களில், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மொபைல் போன் மூலம் முதுகலை தேர்வு முடிவுகளை அறிய, Result UNOMPG என,
டைப் செய்தும், தொழிற்கல்வி தேர்வு முடிவுகளை அறிய, Result UNOMPF என, டைப்
செய்தும், பதிவு எண்ணை குறிப்பிட்டு, 56263 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.,
செய்ய வேண்டும்.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள், The Registar, University of
Madras என்ற பெயரில், 750 ரூபாய்க்கு, வங்கி காசோலை எடுத்து
விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு மற்றும் உடனடி தேர்வுக்கான விண்ணப்பங்களை, www.unom.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment