மும்பையில் 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் தவறான பகுதிகளை
நீக்கி விட்டு நடப்பு ஆண்டுக்கான பாட புத்தகத்தை கல்வித்துறை சமீபத்தில்
வழங்கியது.
இருப்பினும் வரலாற்று பாட புத்தகத்தில் சூயஸ் கால்வாய்
கழிவுநீர் நிறைந்த பகுதி எனவும், பர்மா பிரம்மதேசம் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுகள் நீக்கப்பட்ட பின்னரும் இத்தகைய வரிகள் இடம்
பெற்றிருப்பதால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் இதனை கற்பிக்க முடியாது என
தெரிவித்துள்ளனர்.
மேலும் புத்தகத்தில் ஏராமான மொழி பிழைகளும், எழுத்து
பிழைகளும் இருப்பதாகவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். புகழ்பெற்ற
தேசிய தலைவர்களின் பெயர்கள், இடங்களின் பெயர்களும் தவறுதலாகவே
அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment