உலகளவில் கடல்சார் ஆராய்ச்சிகள் அதிகளவில் தற்போது நடைபெற்று வருகின்றன.
கடலின் அடியில்
புதைந்து கிடக்கும் பழங்கால பொருட்கள், துறைமுகங்கள் மற்றும் கலங்கரை
விளக்கங்களின் சுவடுகள், பழங்கால கப்பல்களின் பாகங்கள், சரித்திர கால
தடயங்கள், அரிய நீர்வாழ் உயரினங்களின் எலும்பு கூடுகள் போன்றவற்றை
கண்டறிவது ஆழ்கடல் தொல்லியல் வல்லுனர்களின் முக்கிய பணி. "அண்டர் வாட்டர்
ஆர்க்கியாலஜிஸ்ட்" என்று ஆங்கிலத்தில் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் முதுநிலை
டிப்ளமோ படிப்புகளாக இவற்றை வழங்குகின்றன. இந்தியாவில் புதிய கடல் சார்
பல்கலைக்கழகங்களை அமைப்பதில் மத்திய அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
இத்தகைய பல்கலைக்கழகங்களில் ஆழ்கடல் தொல்லியல் துறை படிப்புகளும்
சேர்க்கப்படும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
கல்வி நிறுவனங்கள்
* அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்.
* இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கியாலஜி, புதுடில்லி.
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை.
* பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்.
* இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கியாலஜி, புதுடில்லி.
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை.
* பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்.
No comments:
Post a Comment