ஒடிசாவில், அரசுப் பள்ளியில் குண்டு வெடித்ததில், 19 மாணவர்கள்
காயமடைந்தனர். கட்டாக்கின் புறநகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில்,
மாணவர்களின் வருகைப் பதிவேட்டை, நேற்று ஆசிரியை சரிபார்த்துக் கொண்டிருந்த
போது, திடீரென குண்டு ஒன்று வெடித்தது.
இதில், வகுப்பில் இருந்த, 58
மாணவர்களில், 19 பேர் காயமடைந்தனர். அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லப்பட்டனர். பலத்த காயமடைந்த, ஐந்து மாணவர்கள் மட்டும்,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள், முதலுதவிக்குப் பின்
வீடு திரும்பினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மாணவன் ஒருவனின் பையில் குண்டு இருந்தது
தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, போலீசார் மேலும், விசாரணை நடத்தி
வருகின்றனர்.
No comments:
Post a Comment