திட்டக்குடி பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு காலை, மாலை
வேளைகளில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
திட்டக்குடி பகுதியில் திட்டக்குடி, ராமநத்தம், இறையூர்,
பெண்ணாடம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசு, தனியார் மற்றும் அரசு
அங்கீகாரம் பெற்ற மகளிர் மற்றும் இருபாலர் மேல்நிலை பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் 1,000க்கும் மேற்பட்டார் கல்வி பயின்று வருகின்றனர்.
காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அரசு
மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைவரும் தங்களது அலுவல்களுக்காக பஸ்களில்
செல்ல வேண்டிய நிலை உள்ளதால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் போதிய இடமின்றி
மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
சில நேரங்களில் நிற்பதற்கு இடமின்றி படிக்கட்டுகளில்
மாணவிகள் நின்று செல்லும் அவல நிலையும் உள்ளது. இதனால் தவறி விழுந்து
மாணவிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மாலை பள்ளி முடிந்து வீடு
திரும்பும்போதும் இதே நிலைதான்.
இதனால், மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலையை கண்டு
பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே, பள்ளி மாணவிகளின் நலன் கருதி காலை,
மாலை வேளைகளில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment