மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம்,
முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் இந்தாண்டு
வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நல்லாசிரியர்
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில நல்லாசிரியர் விருதுகள்
அறிவிப்பும் வெளியாகவுள்ளது. இதற்காக, தகுதியான ஆசிரியர்கள் ஜூலை 12க்குள்
விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இருபது ஆண்டுகளாக பணிபுரிந்த ஆசிரியர்கள், பணிக்காலத்தில், எந்த
குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல், மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் வகையிலும்,
தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தும் காட்டியிருக்கும் ஆசிரியர்கள், தலைமை
ஆசிரியர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழாசிரியர்கள், சிறப்பு
ஆசிரியர்கள் 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
விருதுக்கு விண்ணப்பிக்க முன்பு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில்
மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும். அரசியல் பின்னணி உள்ளவர் மட்டுமே
விண்ணப்பங்களை பெற முடிந்த நிலைகூட இருந்தது. தகுதி இருந்தும் பலர்
விண்ணப்பிக்காமல் விடுவர்.
தற்போது, இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால் தகுதி உள்ளவர்கள் பதிவிறக்கம்
செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய
முதல்வர், தலைமை ஆசிரியர்கள் குழு ஆக., 10ம் தேதிக்குள் பரிசீலனை செய்து,
கல்வித்துறைக்கு அனுப்ப இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் முருகன், "விருதுக்குரிய விண்ணப்பங்கள்
கிடைக்காமல் தகுதியுள்ள பலர் விண்ணப்பிக்காமல் விடுவர். தற்போது
அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்,&'&' என்றார்.
உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சட்ட செயலாளர்
வெங்கடேஷ், "பள்ளிக்கல்வி துறையின் நடவடிக்கையால் தகுதியுள்ள ஆசிரியர்கள்
பயனடைவர். கல்வி மாவட்டத்திற்கு மூன்று விருதுகள் என்பதை மாற்றி, நான்கு
விருதுகளாக அறிவிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க
வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment