ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேஷன் (ஏ.ஐ.சி.டி.இ.)அமைப்பு
"காமன் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்"(சிமேட்) 2014-2015 தேர்விற்கான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள
வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கு அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம், மேட்
தேர்வினை வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.
தற்பொழுது வெளிநாடுகளில் வாழும் என்.ஆர்.ஐ. மாணவர்களும்
பயன் பெறும் வகையில் அவர்களுக்காகவும், சிமேட் தேர்வினை நடத்த ஏ.ஐ.சி.டி.இ.
முடிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆன்-லைன் வழியாக
நடத்தப்படும் சிமேட் தேர்வினை விண்ணப்பதாரர்கள் இரண்டு முறை எழுதுவதற்கு
வாய்ப்பளிக்கப்படும். முதல் தேர்வு செப்டம்பர் 2013 லும், இரண்டாம் தேர்வு
பிப்ரவரி 2014 லும் நடைபெறும்.
இரண்டில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தார்களோ அது
வணிகப்பள்ளிகளில் சேர்வதற்கான கலந்தாய்விற்கு கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படும்.
சிமேட் தேர்விற்கு பதிவு செய்வதற்கு தொடக்க நாள் 03 ஜூலை
2013 . விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக 21 ஆகஸ்ட் 2013ம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
சிமேட் தேர்வு பற்றிய விபரங்களை காண்பதற்கு ஏ.ஐ.சி.டி.இ. ன் www.aicte-cmat.in என்ற இணையதளத்தை காணலாம்.
No comments:
Post a Comment