மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்.,
மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,)
இரண்டாண்டுகள் தடை விதித்துள்ளது" என, மருத்துவக் கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.
கடந்த, 2008ம் ஆண்டு
துவங்கப்பட்ட, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில், 150
எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. புதிதாக
துவங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில், தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள்,
எம்.சி.ஐ., ஆய்வு மேற்கொள்ளும்.
ஆய்வில், கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதி குறைபாடு, பேராசிரியர்கள்
பற்றாக்குறை போன்றவை கண்டறியப்பட்டால், குறிப்பிட்ட கல்வியாண்டில்,
எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, அனுமதி அளிக்கப்படாது. இதன்படி,
நடப்பு கல்வியாண்டிற்கான ஆய்வின் போது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
மருத்துவக் கல்லூரி நிர்வாகம், வேறு கல்லூரிகளில் பணிபுரியும்
பேராசிரியர்களை, தங்கள் கல்லூரி பேராசிரியர்களாக கணக்கு காட்டியது
கண்டறியப்பட்டது.
இந்த முறைகேட்டை அடுத்து, இக்கல்லூரியில், 2013-14 மற்றும் 2014-15ம்
கல்வி ஆண்டுகளில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, எம்.சி.ஐ., தடை
விதித்துள்ளது என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனால்,
இக்கல்லூரியின் அரசு ஒதுக்கீடான, 97 எம்.பி.பி.எஸ்., இடங்கள், மருத்துவ
படிப்பிற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படாது.
இன்னும் சில நாட்களில், மருத்துவ படிப்பிற்கான, இரண்டாம் கட்ட
கலந்தாய்வு துவங்க உள்ளது. இந்நிலையில், 2013-14ம் கல்வியாண்டில்,
எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ள தனியார்
மருத்துவக் கல்லூரிகளின் விவரம், எம்.சி.ஐ., இணையதளத்தில்
வெளியிடப்படவில்லை.
அதேசமயம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை
இணையதளத்தில், பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தனியார்
மருத்துவக் கல்லூரிகள் பெயர் பட்டியலில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
மருத்துவக் கல்லூரி இடம் பெற்றுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் குறித்து, எம்.சி.ஐ., -
மருத்துவ பல்கலை, மருத்துவக் கல்வி இயக்ககம் ஆகியவை, தொடர்ந்து முரண்பட்ட
தகவல்களை தெரிவித்து வருவது, பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட
வழி வகுக்கிறது.
No comments:
Post a Comment