அரசு பள்ளி ஆய்வு கூடத்தில், மின்சாரம் தாக்கி, மாணவி இறந்தது தொடர்பாக, தலைமை ஆசிரியர் உள்பட, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்யாறு அடுத்த மேனலூர்
கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகள் கலைச்செல்வி,16. கடந்த, 28ம் தேதி,
மேனலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்1 வகுப்பு சேர்ந்தார். நேற்று
முன்தினம் பள்ளி வேதியியல் ஆய்வு கூடத்திற்கு, சக மாணவ, மாணவியருடன்
பயிற்சிக்கு சென்றார்.
அங்கு, டேபிளில் நின்று, பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, சேதமடைந்த
மின்சார பாக்ஸை தெரியாமல் மிதித்ததில், மின்சாரம் தாக்கி இறந்தார்.
செய்யாறு போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், சோதனைக்கூட
உதவியாளர் சங்கர், ஆகியோரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment