கல்விக் கடனுக்கான விதிமுறைகள் ஒரே மாதிரியாக
இருந்தாலும், சில வங்கிகளின் அதிகாரிகள் கடன் அனுமதி கடிதம் தராமல்,
பெற்றோர், மாணவர்களை தொடர்ந்து அலைய வைக்கின்றனர்,
நான்கு லட்சம்
ரூபாய் வரையான கல்விக் கடனுக்கு, மூன்றாம் நபர் ஜாமின் தேவையில்லை. சொத்து
பிணையம் வேண்டாம். ரூ.ஏழரை லட்சம் வரையான கடனுக்கு, அதே மதிப்புக்கு
மூன்றாம் நபர் ஜாமின் தேவை. ரூ.10 லட்சம் வரையான கடனுக்கு, அசையும், அசையா
சொத்து மதிப்புள்ள பத்திரங்கள் தேவை. வெளிநாட்டில் கல்வி பயில்பவர்களுக்கு
ரூ.20 லட்சம் வரை கடனுண்டு. சொத்து பிணையம் தேவை. 2009 ஏப்., 1க்கு பிறகு,
உள்நாட்டில் தொழில், தொழில்நுட்ப படிப்புக்கு கடன் பெற்றால், வட்டி செலுத்த
வேண்டியதில்லை. அதற்கு, பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்குள்
இருக்க வேண்டும். வட்டிக்கான தொகையை மத்திய அரசு, வங்கிகளுக்கு
வழங்கிவிடும். வட்டி விகிதம் வங்கிகளைப் பொறுத்து 12 முதல் 13.5 சத வீதம்
வசூலிக்கப்படுகிறது.
மிரட்டும் அதிகாரிகள்:
"அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்விச் செலவுக்கும் வங்கியே கடன் தரலாம்', என
ரிசர்வ் வங்கி அறிவறுத்தியுள்ளது. ஆனால் கல்விக்கடன் கேட்கும் போது,
"கல்விக்கடன் முழுதும் தரமுடியாது. மூன்றாம் நபர் ஜாமின், சொத்து பிணையம்
வேண்டும்,' என்கின்றனர், மேலாளர்கள். படித்து முடித்த ஓராண்டிலிருந்து
அல்லது வேலை கிடைத்த ஆறு மாதத்திலிருந்து வட்டி, அசல் செலுத்தினால் போதும்.
தொழிற்படிப்புகளுக்கு வட்டி சலுகை இருந்தும், மாதந்தோறும் வட்டி
கட்டாவிட்டால், அடுத்த செமஸ்டர், அடுத்தாண்டுக்கான கல்விக்கட்டணம்
தரமுடியாது,' என, பயமுறுத்துகின்றனர். ஒரு குடும்பத்தில் இருவருக்கு
கல்விக்கடன் தர அனுமதியுண்டு. ஆனால் ஒருவருக்கு கடன் கொடுத்தால்,
மற்றவருக்கு கடன் தருவதில்லை. கல்விக்கடன் பெறுவதற்கு இன்சூரன்ஸ் செய்வது
தனிநபர் விருப்பம். சில மேலாளர்கள், "உங்களுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால்,
இன்சூரன்ஸ் தொகையை கடனுக்கு ஈடாக கட்டி விடலாம்' என பயமுறுத்தி, பாலிசியில்
சேர்க்கின்றனர். பங்குசந்தையில் பயன்படுத்தப்படும் அதிகபட்ச (யுலிப்
பாலிசி) இன்சூரன்ஸ் தொகையை வசூலித்து, தனியாக கமிஷனும் பெறுகின்றனர்.
ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு, பெற்றோர்
தள்ளப்படுகின்றனர்.
அனுமதி கடிதம் அவசியம்: எந்த படிப்பாக
இருந்தாலும், வங்கி அலுவலரிடம் அனுமதி கடிதம் பெறவேண்டும். கடிதத்தில்
கடன் வாங்குபவர் பெயர், முகவரி, நோக்கம், படிப்பு, மொத்தச் செலவு
மதிப்பீடு, வங்கி வழங்கும் கடன் தொகை, பட்டுவாடா செய்யும் விதம், வட்டி
மானியம், மூன்றாம் நபர் ஜாமின், சொத்து பிணையம் தேவையா, திருப்பி
செலுத்தும் காலம்... என அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கும். வங்கி
அலுவலரிடம் இந்த அனுமதி கடிதத்தை தான், முதலில் பெற வேண்டும். அனுமதி
கடிதம் கொடுத்தால், கட்டாயம் கடன் தரவேண்டும் என்பதால், அனுமதி கடிதம்
தராமல் சில மேலாளர்கள் இழுத்தடிக்கின்றனர். ஏதாவது சான்றிதழ் தரவில்லை
என்று பொய்க் காரணம் கூறி, மாதக்கணக்கில் அலைய வைக்கின்றனர். கடிதம்
தராவிட்டால், வங்கியின் மண்டல அலுவலகம் அல்லது அந்தந்த மாவட்ட முன்னோடி
வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment