பொதுத்தேர்வுகளில்,
தொடர் குளறுபடி ஏற்பட்டு வருவது குறித்து, கல்வியாளர் ராஜகோபாலன்
கூறியதாவது: தபால் துறை, தற்போது போதிய பணியாளர்கள் இல்லாமல், செயல்திறன்
குறைந்து விட்டது.
எனினும், பொதுத் தேர்வில், இதுபோன்ற தவறு நடக்கக்
கூடாது. 10 ஆண்டுகளுக்கு முன், குளித்தலையில், தபால் அலுவலகத்திற்கு
அனுப்பிய விடைத்தாள் பார்சல் கட்டை, பெட்டிக்கடையில் வைத்து திறந்து,
குறிப்பிட்ட சில விடைத்தாள்களை உருவி எடுத்துவிட்டு, ஏற்கனவே தயார்
செய்யப்பட்ட விடைத்தாள்களை, அதில் சேர்த்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்
இருந்தே, பொதுத்தேர்வுகளில், ஏதாவது தவறுகள் நடந்துகொண்டே தான்
இருக்கின்றன. எது ஒன்று, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ,
அதில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியின் காரணமாக, தவறு செய்கின்றனர்.
தேர்வு முறை, ஒரே படபடப்பு நிறைந்ததாகவும், மகிழ்ச்சி இல்லாமல்,
மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன உளைச்சல் நிறைந்ததாகவும்
இருக்கின்றன.இந்த மன உளைச்சல் இல்லாத தேர்வு முறை தான், எல்லாவற்றுக்கும்
தீர்வாக இருக்கும். அதற்கு தேவையான திட்டங்களை ஆய்வு செய்து, தமிழக அரசு
அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு ராஜகோபாலன் கூறினார்.
No comments:
Post a Comment