தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங்கை
நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி
ஆசிரியர் கழக மாநில தலைவர் சுப்பையா பேசினார்.
பாளை சின்மயா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முன்பு நேற்று வாயிற் கூட்டம் நடந்தது.
இணை செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிங்கராஜ், பொருளாளர் தளவாய், கல்வி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர். தென்காசி கல்வி மாவட்ட செயலாளர் சிவராஜ் வரவேற்றார். மாவட்ட தலைவர் அய்யாதுரை உட்பட பலர் பேசினர். மாவட்ட செயலாளர் மனோகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில் மாநில தலைவர் சுப்பையா பேசியதாவது:
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த தற்போது 7.50 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். 1.6.2006க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அடுத்த மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் இல்லாமல் ஒளிவுமறைவற்ற முறையில் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும். முதுகலைஆசிரியர் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 720யால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும். ஊதிய குழு முரண்பாடுகளை களைய வேண்டும். ஒரு நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். வரும் கல்வி ஆண்டில் ஆயிரத்து 591 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம்.
இவ்வாறு மாநில தலைவர் பேசினார்.
நெல்லை கல்வி மாவட்ட தலைவர் ஆசீர் சார்லஸ் நீல் நன்றி கூறினார்.
பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி முன்பு இன்று (9ம் தேதி) காலையில் வாயிற் கூட்டம் நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment