"பத்தாம்
வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், அனைத்து வினாக்களும்
எதிர்பார்த்தபடி மிகவும் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. சராசரி மாணவர்களும்,
60 மதிப்பெண்கள் பெறக்கூடும். நன்றாக படிக்கும் பலர் "சென்டம்' பெற
வாய்ப்புள்ளது' என, மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.
ஏ.அப்துல்வாஜித்,
மாணவர், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்:
ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், மிக "ஈசி' யான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. சராசரி மாணவர்களும், குறைந்தது 50 மதிப்பெண்கள் பெறமுடியும். நன்றாக படிக்கும் மாணவர்கள் "சென்டம்' எடுக்க வாய்ப்பு உள்ளது. ஐந்து மார்க் வினாவான "மை மேப்' கொஞ்சம் கடினமாக இருந்தது. படித்தவற்றில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால், பெரும்பாலான மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவர்.
எஸ்.ஸ்ரீதிகா, மாணவி, நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்:சுமாராக படிக்கும் மாணவர்கள் கூட, அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில் எளிமையான வினாக்கள், அதிகம் இடம்பெற்றிருந்தன. ஆங்கில தேர்வு என்ற பயமே இல்லை. அந்தளவிற்கு, பாடப்புத்தகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்திருந்த, வினா வங்கியில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.புரிந்து கொள்ளும் வகையில் கேட்கப்பட்டிருந்த வினாக்களால் பலர் "சென்டம்' எடுப்பர்.

துணைப்பாடம் 7ல், அதிகபட்ச வினாக்கள், முதல் மூன்று பகுதியில் இருந்தே
கேட்கப்பட்டிருந்தது. எம்.ஜெயமணி கில்டா, ஆசிரியை, புனித ஜோசப்
உயர்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: பெற்றோர் ஆசிரியர் கழக வினா வங்கி, அரசு
வழங்கிய கேள்விகள் அடங்கிய "சிடி' யில் இருந்து, ஏராளமான வினாக்கள்
கேட்கப்பட்டிருந்தன. இதை நன்றாக படித்திருந்தாலே, 60 மதிப்பெண்கள் தாராளமாக
பெறமுடியும். ஆங்கிலம் முதல் தாளை விட, இரண்டாம் தாள் தேர்வு, மிகவும்
எளிதாக இருந்தது. சராசரி மாணவர்கள் கூட, அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.
"பொருத்துக பகுதியில்' வினா எண் 3ல், நான்காம் வினாவில் "லூனல்' என்பதற்கு
பதிலாக "லஞ்ச்' என, தவறுதலாக கேட்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த
வினாவை புரிந்து கொண்டு, மாணவர்கள் சரியான பதிலை அளித்திருப்பர். இவ்வாறு
கூறினர்.
No comments:
Post a Comment