பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பாக, விருத்தாசலம்
ரயில் நிலையத்தில், அஞ்சல் துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டம், பி.முட்லூர் மையத்தில், மார்ச், 28ம் தேதி, 10ம்
வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள்,
29ம் தேதி நள்ளிரவு, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அனுப்பப்பட்டன.
விருத்தாசலம் ரயில் நிலையம் அடுத்த, நாச்சியார்பேட்டை ரயில்வே கேட்
அருகே, ஒரு பண்டல் விடைத்தாள்கள் கீழே விழுந்து சேதமாகின. இது தொடர்பாக,
திருச்சி, ஆர்.எம்.எஸ்., ஊழியர்கள் பாலு, ரவி, ஜெயக்குமார், மாலிக்
ஆகியோர், "சஸ்பெண்ட்" செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அஞ்சல் துறை திருச்சி விஜிலன்ஸ் அதிகாரிகள், விருத்தாசலம்
ரயில் நிலையத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டு, ரயில் நிலையத்திலிருந்து,
விடைத்தாள் பண்டல் விழுந்த இடம் வரை, அளவீடு செய்தனர்.
அதில், 348 மீட்டர் தூரத்தில், விடைத்தாள் பண்டல் விழுந்துள்ளது
No comments:
Post a Comment