"பத்தாம் வகுப்பு கணித தேர்வில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பது சிரமம்" என, மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஜோன்ஸ் லெஸ்லி, மாணவர், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி,
அருப்புக்கோட்டை ரோடு, மதுரை: பாடப் புத்தகத்தின் பின்பகுதியில் இடம் பெற்ற
கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மார்க் கேள்வி பிரிவில், யோசித்து
எழுதும் கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
வரைபடம், ஜாமென்ட்ரி பிரிவுகள் எளிதாக இருந்தன. இரண்டு மற்றும் ஐந்து
மார்க் பிரிவில் இடம் பெற்ற கட்டாய வினாக்களில், "சாய்ஸ்" வினாக்கள்
யோசித்து, பதில் எழுதுவதாக இருந்தன.
நந்தினி, மாணவி, ஈ.வெ.ரா., மாநகராட்சி பள்ளி, மதுரை: ஒரு மார்க்
பிரிவில் கேள்விகள் பெரும்பாலும், புத்தகத்தின் பின் பகுதியில் இடம்
பெற்றிருந்தவை கேட்கப்பட்டதால், எளிதாக இருந்தது. இரண்டு மார்க் கேள்விகள்
சில யோசித்து எழுதுவதாக, சுற்றி வளைத்து கேட்கப்பட்டது.
ஐந்து மார்க் பிரிவில் பொதுவாக, எதிர்பார்க்கப்பட்ட கேள்விகள் இடம்
பெறவில்லை. "கணங்களும் சார்புகளும்' பிரிவில் "சார்புகள்'
பிரிவில் இருந்து மட்டுமே 2 கேள்விகளும் இடம் பெற்றிருந்தன. ஏமாற்றமாக
இருந்தது. "நூற்றுக்கு நூறு' கிடைப்பது கடினம்.
முத்துப்பிள்ளை, தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி, பொட்டப்பட்டி:
புத்தகத்தின் பின் பகுதியில் இருந்தும், கட்டாய வினா பகுதியிலும் எந்த
கேள்வியும் கேட்கலாம் என்று, சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, கணித தேர்வில் வினாக்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டு மார்க் பிரிவில்
6 கேள்விகள் மட்டும் நேரடியாக கேட்கப்பட்டன. 9 கேள்விகள் யோசித்து
விடையளிப்பதாக இருந்தன. கிராம மாணவர்களுக்கு, இது சிரமமாக இருக்கும்.
16வது கேள்வி, "கணங்களை கொடுத்து வெட்டு பரிமாற்று பண்புடையது என்று
நிரூபி&' என நேரடியாக கேட்டிருந்தால், அனைவரும் விடை அளித்திருப்பர்.
அந்த கேள்வி சுற்றி வளைத்து கேட்கப்பட்டுள்ளது. 31வது கேள்வி இடம் பெற்ற
இரு கேள்விகளும் "சார்புகள்" பகுதியில் இருந்து இடம் பெற்றன.
37வது கேள்வி இயற்கணிதத்திலும், 43வது கேள்வி புள்ளியியல் பகுதியிலும்
கேட்கப்பட்டன. இது மாணவர்கள் எதிர்பார்க்காதது. வெற்றி பெறுவது சிரமம்
இல்லை. அதிக மார்க் பெறுவதும், நூற்றுக்கு நூறு பெறுவதும் சற்று சிரமம்
No comments:
Post a Comment