"தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என,
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வழங்கப்படவில்லை"
என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பார்த்திபன் கூறினார்.
இதற்கு, பதில் அளித்த உயர்
கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்குத்
தான், மடிக்கணினி வழங்கப்படும் என, அறிவித்தோம்" என்றார்.
சட்டசபையில், உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது, நேற்று நடந்த விவாதம்:
தே.மு.தி.க., பார்த்திபன்: அ.தி.மு.க.,வின் தேர்தல்
அறிக்கையில், "அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரி
மாணவர்களுக்கு, மடிக்கணினிகள் வழங்கப்படும்" என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.
உயர்கல்வி அமைச்சர்: தமிழக அரசின், 2011-12ம் ஆண்டு
பட்ஜெட்டில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளுக்குத் தான்,
மடிக்கணினிகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, மடி கணினிகள்
வழங்கப்படுகின்றன.
சென்னை, கிறிஸ்தவ கல்லூரியில் படித்த மாணவி, தற்போது லண்டன் கல்லூரி
ஒன்றில், மேற்படிப்பு படிக்கிறார். அவர், தமிழக அரசு வழங்கிய,
மடிக்கணினியைத் தான் பயன்படுத்தி வருகிறார்.
ne
தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் எங்கு சென்றாலும், அவர்களுக்கு தமிழக
அரசு அளித்த மடிக்கணினி, பேருதவியாக உள்ளது என்பதற்கு இதுவே சான்று.
இவ்வாறு, விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment