கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில், பிளஸ் 2
மாணவர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி
ஏப்.,8ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து வேந்தர் கே. ஸ்ரீதரன் கூறியதாவது: ஏப்..8ம்
தேதி முதல் 12ம் தேதி வரையும், ஏப்.,15ம் தேதி முதல் 19ம் தேதி வரையும் இரு
கட்டங்களாக பயிற்சி நடக்கிறது. பயிற்சியில் காலையில் வகுப்புகளும் ,
மாலையில் பரிசோதனை கூடங்களில் பயிற்சியும் தரப்படும். பயிற்சி புத்தகங்கள்,
சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இப்பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட
அனைத்து பள்ளி பிளஸ் 2 மாணவர்களும் இதில் பங்கு பெறலாம். பயிற்சியில் சேர
விரும்புவோர் எந்த கட்டத்தில் சேர விரும்புகின்றனரோ அதை குறிப்பிட்டு 94437
28907, 96597 97417 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு காலை மாலை, இலவச பஸ் வசதி, மதிய உணவு
வசதி செய்யப்பட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment