"தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத
பணியாளர்களுக்கு, வங்கி மூலம் ஊதியம் செலுத்தப்படும்' என, தமிழ்நாடு
ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் கல்லூரிகளில் பணிபுரியும், ஆசிரியரல்லாத பணியாளர்கள் கடந்த ஜன., 4ம் தேதியும், பல்கலைக்கழக துணைவேந்தர், மார்ச் 11ம் தேதியும், தனியார் கல்வியியல் கல்லூரி நிர்வாகங்கள், மிக குறைந்த ஊதியம் வழங்குவதாக, புகார் அளித்துள்ளனர்.
தனியார் கல்லூரிகள், ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழக மானிய குழு
நிர்ணயித்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு,
மாநில அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தை அளிக்க வேண்டும். இவர்களின் ஊதியங்களை,
வங்கி காசோலையாக ஊழியர்களின் வங்கி கணக்கில் கல்லூரி நிர்வாகம், நேரடியாக
செலுத்த வேண்டும். இம்முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு,
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment