ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு, கடைசி மாத
ஊதியத்தில், பாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு
சத்துணவு பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு
சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
தொடர் முழக்க போராட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், நடந்தது.
பணியாளர்களின் கோரிக்கைகள்: சத்துணவு திட்டத்தில், பலவகை உணவு வழங்கும் திட்டத்திற்கு, மானியத் தொகையை அதிகரிக்க வேண்டும். எரிவாயு மற்றும் தேவையான தளவாடச் சாமான்களை, ஆதிதிராவிட நலப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, 300 மாணவர்களுக்கு மேல்,
உணவு உண்ணும் மையங்களுக்கு, மேலும், ஒரு உதவியாளர் பணி நியமனம் செய்ய
வேண்டும். சத்துணவு திட்டத்தில் பதவி உயர்வு இல்லாமல், பத்து ஆண்டுகளுக்கு
மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு, ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கும், 10 சதவீதம்
ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு,
தற்போது வழங்கப்படும் ஓய்வூதியமான, முறையே, 500, 600, 700 என்பதை மாற்றி,
1,500, 2,000, 2,500 என, உயர்த்தி வழங்க வேண்டும். இனி ஓய்வு பெறும்
சத்துணவு பணியாளர்களுக்கு, கடைசி மாத ஊதியத்தில், பாதியை ஓய்வூதியமாக வழங்க
வேண்டும். இவ்வாறு, கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment