வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள
3500 அரசால் நடத்தப்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் ஆங்கிலப் பயிற்று மொழி
வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில்
34871 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 8500 பள்ளிகள் ஆங்கிலப் பயிற்று
மொழிப் பள்ளிகளாக உள்ளன.
உலகெங்கும் உள்ள கல்வியாளர்களும் சமூக
சிந்தனையாளர்களும் தாய் மொழி வழியாக கல்வி கற்பதே ஆக்கப்பூர்வமான அறிவு
வளர்ச்சிக்கு உகந்தது என்பதை வலியுறுத்துகின்றனர். தமிழ்நாடு அரசு அமைத்த
நீதியரசர் மோகன் குழு, முனைவர் முத்துக்குமரன் குழு என்பன மட்டுமின்றி
நடுவன் அரசு அமைத்த கோத்தாரி குழுவும் தாய்மொழி வழியாகவே கல்வி கொடுக்கப்பட
வேண்டும் என்றே பிரிந்துரைத்தது.
இதன் அடிப்படியாகவே சமச்சீர்க் கல்வி
முறை தற்போது அமல்படுத்தப்பட்டது. மேலும், “குழந்தைகளின் இலவசக் கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டம் 2009” ன் அத்தியாயம் 5ன் பிரிவு (2)(க) ன் படி
பயிற்றுமொழி என்பது கூடிய வரையில் குழந்தைகளின் தாய்மொழியிலேயே இருத்தல்
வேண்டும் என்று குறிப்பிடுகிறது. இந்திய அரசால் சட்டமும் இதையே
வலியுறுத்துகிறது.
சீனா ரஷ்யா, ஜெர்மனி ஜப்பான், பிரான்சு உள்ளிட்ட பல வளர்ச்சி பெற்ற நாடுகளில் தாய்மொழியாகவே கல்வி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தாய்மொழி வழியாகக் கல்வி
வழங்குகின்ற அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை வழங்குவது என்ற
தமிழ்நாடு அரசின் நடவடிக்கை முற்றிலும் இயல்பான, ஆக்கப்பூர்வமான கல்வி
வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையாகும் .
தாய்மொழி வழியில் கல்வி பெறுவதே
குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.
பிறநாடுகளிலும் பிறமாநிலங்களிலும் வேலைவாய்ப்பு என்ற மாயமானைக் காட்டியே
இது நியாயப்படுத்தப்படுகிறது ஆனால், பிற மொழிகளை கற்பதை நாம்
எதிர்க்கவில்லை. மாறாக பயிற்று தாய் மொழி மட.டுமே இருக்கவேண்டும் என்பதையே
வலியுறுத்துகின்றோம்.
ஆங்கிலக் கல்வி என்பது முற்றிலும் வணிக
நோக்கிலானது. படிப்படியாக அரசு பள்ளிகளை தனியார் மாயமாக்கும் நோக்கத்திற்கே
இது தொடக்கப்புள்ளியாகும்.
இது தமிழ் மொழியையும் தமிழர்
வாழ்வியலையும் அழிக்கின்ற, தமிழ் இன அடையாளத்தையே குழிதோண்டி புதைக்கின்ற
செயலாகும். தற்போது அரசுப் பள்ளிகளில் ஏழை குழந்தைகளின் நாவில் மட்டும்
நடமாடும் தமிழ்த்தாயை அழித்துவிட முனையும் இக்கொடிய செயலை வன்மையாக
கண்டிக்கின்றோம்.
எனவே தமிழ் நாடு அரசு உடனடியாக அரசுப்
பள்ளிகளில் ஆங்கில பயிற்று மொழி வகுப்புகளை தொடங்கும் திடடத்தை கைவிட
வேணடும் என இக்கூட்டறிக்கை வாயிலாக கோரிக்கைவிடுக்கிறோம்.
இக்கூட்டறிக்கையை வெளியிடுவோர்:
1. முது முனைவர் இரா இளங்குமரனார் திருவள்ளுவர் தவச்சாலை
2. முனைவர் பொற்கோ முன்னாள் துணைவேந்தர் சென்னைப் பல்கழைக்கழகம்
3. மு.களஞ்சியம் திரைப்பட இயக்குனர் தமிழர் நலம் பேரியக்கம்
4. முனைவர் கு திருமாறன் பாவாணர் தமிழியக்கம்
5. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்
6. கண குறிஞ்சி மக்கள் நல்வாழ்வு இயக்கம்
7. முனைவர் ப.இறையரசன் தமிழர் எழுச்சி பேரவை
8. அரிமா.குறள் மொழி தமிழ் அறிவியக்கப் பேரவை
9. வீ.ந சோமசுந்திரம் திருச்சி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்ப
10. திருக்குறள் சு;முருகானந்தம் திருக்குறள் கல்வி மையம்
11. வழக்கறிஞர் தமிழகன் நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு
12. சி.சிவப்பிரகாசம். சமூக செயல்பாட்டு இயக்கம் பெரம்;பலூர்
13. கவிஞர் பொன் குமார், எழுத்தாளர் சேலம்
14. வழக்கறிஞர் கென்னடி, அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம்
15. எ.ஸ். ஜி செல்வி. பாரம்பரிய சித்த வைத்தியர்கள் கூட்டமைப்பு பேராவூணி
16. வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன்
17. கவிஞர் காசி பிச்சை இயற்கை வாழ்வியல் இயக்கம்
18. பி.இரெ.அரசெழிலன் நாளைவிடியும் திங்களிதழ்
19. கல்வியாளர் நா ஜெயராமன் உதவி தொடக்கல்வி அலுவலர் (ஓய்வு)பெரம்பலூர்
20. பாவலர் நிறைமதி தமிழ் படைப்பாளிகள் சங்கம் (குமாரபாளையம் )
21. அரங்ககணபதி தமிழ்ச் சங்கம் (குமாரபாளையம் )
22. அலங்க வெங்கட் தலித் மக்கள் இயக்கம் திருச்சி
23. கவிஞர் யுகப்பிரியன் தமிழர் நலம் பேரியக்கம் கும்பகோணம்
24. மரு.கோபால் அரும்பாவூர்; தமிழ்ச்சங்கம்
25. ஆ.ரெங்கனாதன் 5வது அட்டவணைக்கான பழங்குடியினர் பிரச்சாரம் சேலம்
26. ஆ.ச நிக்கோலஸ் மக்கள் முன்னேற்ற மன்றம் திண்டுக்கல்
tamil nadu govt english medium school is welcome it is good for poor people who cannot get english education now only rich getting english medium here after all people get english medium and also metriculation school come down and reduce fees to atract middle class
ReplyDeletethere is no need for english medium. The children and parents need only enlish knowledge. so there is a need for spoken enlish teacher only. it is enough for them
ReplyDelete