பொள்ளாச்சி சப்-டிவிஷன்; கிணத்துக்கடவு, வால்பாறை
தாலுகாக்களை உள்ளடக்கியது. உடுமலை திருப்பூர் மாவட்டமாக இருந்தாலும்,
உடுமலைக்கு நெருங்கிய டவுனாக பொள்ளாச்சி விளங்குகிறது. மருத்துவம்,
மார்க்கெட், விவசாய விதைகள், மருந்துப்பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட
பல்வேறு பணிகளுக்கு பொள்ளாச்சிக்கே பொதுமக்கள் வரவேண்டிய கட்டாய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
அதோடு பொள்ளாச்சி மிகப்பெரிய வணிக மையமாக திகழ்கிறது.
அதனால் அன்றாடம் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை பொள்ளாச்சி பெற்றுள்ளது.
பொள்ளாச்சியில் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள்,
கல்லூரிகள் ஏராளம் அதில் சேர்ந்து படிப்பதற்கு, நல்ல வசதி படைத்தவர்களால்
மட்டுமே முடிகிறது. ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களால்
அந்த கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதுவரை
பொள்ளாச்சியில் அரசு சார்பில் கலை அறிவியல் கல்லூரியோ, பாலிடெக்னிக்
கல்லூரியோ, இன்ஜினியரிங் கல்லூரியோ இது வரை துவங்கப்படவில்லை.
ஆனால், பொள்ளாச்சியை சார்ந்து விளங்கும் உடுமலை மற்றும்
வால்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. பொள்ளாச்சியில் கலை
அறிவியல் கல்லூரியும், இன்ஜினியரிங் கல்லூரியும் அமைத்துக்கொடுப்பேன் என்று
எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.,க்களும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி
அளித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை.
எப்போது நிறைவேறும் என்று மக்கள் இது வரை காத்திருந்து
பொறுமையை இழந்து விட்டனர். இனிவரும் நாட்களில் அரசு கல்லூரி பொள்ளாச்சியில்
அமைய வேண்டும் அதற்கு அரசும் அரசின் பிரதிநிதிகளாக இருக்கும்
எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் முழுமையாக ஒத்துழைப்பு
நல்கவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment