எஸ்.எஸ்.எல்.ஸி., ஆங்கிலம் இரண்டாம் தாளில், "சரியான விடையை தேர்ந்தெடுத்து
எழுதுக' என்ற ஒரு மார்க் கேள்வி அச்சுப்பிழை இருந்ததால் தேர்வர்கள்
குழப்பமடைந்தனர்.
தமிழகம் முழுவதும், எஸ்.எ ஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, மார்ச் 27 துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கிறது. மொழிப்பாட வரிசையில் நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது.
ஆங்கிலம் இரண்டாம் தாளி ல், நான்டீடெயில், சப்ளிமென்ட்ரி ஆகிய பகுதிகளில் இருந்து, 100 மார்க்குக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. வினாத்தாள் பக்கம் 3ல், சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக என்ற கேள்வியில், "ஃக்Nஉஃ'என அச்சா கமால், "ஃக்Nஇஏ'என அச்சாகியிருந்தது. அச்சுபிழையாக இருந்த கேள்வியை பல தேர்வர்கள் பதி ல் அளிப்பதில் குழம்பி போயினர். மற்ற கேள்விக்கு விடையளித்தது போக, எஞ்சியிருந்த பதி லை வைத்து, அச்சுபிழையிருந்த வினாவுக்கு பதில் அளித்தனர்.
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில், தேர்வு முடிந்து, வெளியே வந்த தேர்வர்கள் சிலர் கூறியதாவது:
சோபி: பக்கம், 2ல் கேள்வி எண் 3ல் வார்த்தைகள் அச்சுப்பிழையாக இருந்தது. குழப்பமாக இருந்த ஒரு மார்க் கேள்விக்கு சரியான விடையை எழுதியுள்ளேன். ஆங்கிலம் முதல் தாளில், 80 மார்க்கும், இரண்டாம் தாளில், 85 மார்க் வரும் என எதிர்பார்க்கிறேன்.
சாமுண்டீஸ்வரி: ஒரு மார்க் கேள்வியில் அச்சுபிழையால் குழப்பமாக இருந்தது. இரு தாளிலும் தலா, 90 மார்க் வரும்.
சூர்யா: "மேட்ச் தி பாலோயிங்' ஒரு மார்க் கேள்வியில் அச்சுபிழை இருந்தும், முறையாக பதில் அளித்துள்ளேன்.
முத்து வேளாங்கண்ணி: அச்சுப்பிழையான கேள்வி தவிர மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தது.
இவ்வாறு தேர்வர்கள் கூறினார்.
No comments:
Post a Comment