தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செய்திக் குறிப்பு : குரூப்- 4ல்,
இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பணிக்கு, 2012, ஜூலை7 ல், தேர்வு
நடந்தது.
இதில், 1,641 காலிப் பணியிடங்களுக்கான, மூன்றாம் கட்ட சான்றிதழ்
சரிபார்ப்பு பணி மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, ஏப்., 17
முதல், 19 வரை, காலை, 8:30 மணிக்கு, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.
கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவு எண், தேதி
உள்ளிட்ட விபரங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள்,
மூலச் சான்றிதழ்கள், சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
No comments:
Post a Comment