பிளஸ் 2 வணிகவியல் ஆங்கில வழியில், "பகுதி அ" வில் 10வது வினா:
கீழ்க்கண்ட சூழ்நிலைகளுள் எப்போது கடனீட்டுப் பத்திரதாரர்கள் வட்டிபெறும்
உரிமை பெற்றுள்ளனர். விடை: (அ) நிறுமம் லாபம் ஈட்டும்பொழுது, (ஆ)
பங்குநர்கள் பங்காதாயம் பெறும்பொழுது, (இ) நட்டம் ஏற்படும் ஆண்டு உட்பட
எந்த ஆண்டிலும்.
இந்த வினாவிற்கு விடை, "இ" என, தமிழ் வழிப் புத்தகத்தில் உள்ளது. ஆனால்
ஆங்கில வழி மாணவர்களுக்கான புத்தகத்தில், நான்காவதாக, (ஈ) மேற்கண்ட
அனைத்தும் (ஆல் தி அபவ்) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, "ஈ"தான்
விடையென மாணவர்கள் படித்து வந்தனர்.
ஆனால் வினாத்தாளில், (ஈ) "மேற்கண்ட அனைத்தும்" என்ற விடை இல்லை. இதனால்
ஆங்கில வழி ஆசிரியர்கள், எந்தப் பதிலை எழுதினாலும் விடை சரிதான் என்பதால்,
மதிப்பெண் அளிக்கலாம் என, முடிவுக்கு வந்தனர்.
இதுகுறித்து சந்தேகம் எழுந்த போது, சென்னை தேர்வுத் துறை அதிகாரிகளிடம்
ஆசிரியர்கள் சார்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து எழுத்துபூர்வமாக அவர்கள்
பதிலளித்தனர். அதில், தமிழ் வழி மாணவர்கள் விடையாக, "இ" எழுத வேண்டும்,
ஆங்கில வழி மாணவர்கள், "இ" அல்லது, "ஈ" என்ற விடை எழுத வேண்டும் என
தெரிவித்தனர்.
இதையடுத்து, தேர்வுத்துறை கூறியபடி, "இ அல்லது ஈ யில்" ஒன்றை எழுதினால்
மட்டுமே மதிப்பெண் தரவேண்டும் என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆனால் வினாத்தாளில், "ஈ" இல்லாததால், பலர் விடையை எழுதாமல் உள்ளனர்.
அவர்கள் ஒரு மதிப்பெண்ணை இழக்க வாய்ப்புள்ளது.
இதனால் வணிகவியல் ஆங்கில வழி ஆசிரியர்கள் விடை திருத்தம் குறித்து குழப்பத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment