பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள், மிக மிக எளிமையாக இருந்தது. பாடப்
புத்தகத்தில் இருந்தே, அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டதால் மாணவர்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.
மாணவி சித்ராதேவி, சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்: படம் கொடுத்து விளக்கம் கேட்கப்பட்ட வினா, மாணவர்கள் சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்ததால் கஷ்டமாக இருந்தது.
சராசரி மாணவர்கள் கூட தேர்ச்சி பெறும் அளவிற்கு, எளிமையாக வினாத்தாள்
இருந்தது. அனைத்து பகுதிகளிலும், வினாக்கள் பதிலளிக்கும் வகையில் இருந்தது.
எதையும் தவிர்க்கும் வகையில் வினாக்கள் இடம் பெறவில்லை. "சென்டம்" எடுக்க
அதிக வாய்ப்புள்ளது.
மாணவன் சதீஷ்குமார், சவுடாம்பிகை மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்:
மனப்பாடம், கட்டுரைகள் முதல் பாடத்திலிருந்து கேட்கப்பட்டதால் மிக
எளிமையாக விடையளிக்க முடிந்தது. அனைத்து வினாக்களும், ஏற்கனவே
பொதுத்தேர்வு, திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் என்பதால்
சிரமமின்றி பதலளிக்க முடிந்தது.
குறைந்த அளவில் மதிப்பெண் பெறும் மாணவர்கள் கூட, அதிக மதிப்பெண் பெறும்
நிலையில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. கடைசியில் கேட்கப்பட்டிருந்த பட
விளக்கம் மட்டுமே கஷ்டமாக இருந்தது. ஆங்கிலத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற
முடியும்.
சுமதி, ஆசிரியை, டி.பி.என்.எம்., பெண்கள் பள்ளி, விருதுநகர்:
முதல் பாடத்தில் இருந்தே கட்டுரை கேட்கப்பட்டிருந்தது. மனப்பாட பாடல் 10
வரிக்குள் சுருக்கமாக பதிலளிக்கும் படியாக இருந்ததால், மாணவர்கள் எளிதில்
எழுதியிருப்பார்கள். பாடப்புத்தகத்தில் இருந்து நேரடியாக வினாக்கள்
கேட்கப்பட்டிருந்தது. சினானிம்ஸ், ஆன்டனிம்ஸ்- மாணவர்கள் படித்தவற்றில்
இருந்தே கேட்கப்பட்டிருந்ததால் எளிமையாக இருந்தது.
வினாக்கள் அனைத்தும் எதாவது ஒரு தேர்வில் கேட்கப்பட்டிருந்ததே,
திருப்பியும் இடம் பெற்றிருந்ததால் சராசரி மாணவர்கள் கூட குறையாமல் 50
மதிப்பெண் பெறும் நிலையில் வினாத்தாள் இருந்து. கடைசி வினா 53 ல் படம்
கொடுத்து விளக்கம் கேட்கப்பட்டது மாணவர்களுக்கு சிரமத்தை
ஏற்படுத்தியிருக்கும். மாணவர்கள் கிரியேட்டிவாக பதில் அளிக்கும் விதத்தில்
இருந்தது. இவ்வாறு மாணவ, மாணவிகள் கூறினர்.
No comments:
Post a Comment