மதுரை புதூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவருக்கு, கல்விக்கடன்
வழங்க, இந்தியன் வங்கி கிளை மேலாளர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு
பிறப்பிக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதூர் ராமவர்மா நகர் முனியசாமி
தாக்கல் செய்த மனு: எனது மகன் பார்த்தசாரதி. இவர், காஞ்சிபுரம் அருகே
அறுபடை வீடு பொறியியல் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீட்டில் பி.இ.,
படிக்கிறார். கல்விக்கடன் 6 லட்சத்து 900 ரூபாய் வழங்கக்கோரி, மதுரை புதூர்
இந்தியன் வங்கி கிளையில் விண்ணப்பித்தோம். நடவடிக்கை இல்லை. கல்விக்கடன்
வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
வக்கீல் வி.சீனிவாசன் ஆஜரானார். நீதிபதி: இந்திய வங்கிகள் சங்கம்,
கல்விக்கடனுக்கான வழிகாட்டுதல்களை மாற்றியமைத்துள்ளது.
புதிய கல்விக்கடன் திட்டத்தின்படி, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக
ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு, வேறுபாடின்றி கடன் வழங்க வேண்டும்.
மாற்றியமைக்கப்பட்ட கல்விக்கடன் திட்டத்தின்படி, மனுதாரரின் விண்ணப்பத்தை
தகுதி அடிப்படையில், கிளை மேலாளர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க
வேண்டும், என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment