குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும்,
குழந்தைகளுக்கான புத்தங்கங்கள் எழுத, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்
விதமாகவும் ஏப்., 2ம் தேதி உலக குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளுக்கான கதைகளில் புகழ்
பெற்றவரான டென்மார்க்கின் ஆண்டர்சன் என்பவரின் பிறந்தநாள் தான், இத்தினமாக
உருவெடுத்தது. ஐ.பி.பி.ஒய்., (இளைஞர்களுக்கான உலக புத்தக அமைப்பு)
இத்தினத்தை கடைபிடிக்கிறது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த அமைப்பு, தற்போது
இந்தியா உள்ளிட்ட 72 நாடுகளில் செயல்படுகிறது.
டென்மார்க்கை சேர்ந்தவர் கவிஞர் எச்.சி. ஆண்டர்சன். இவர் 1805 ஏப்., 2ல்
பிறந்தார். 14 வயதில் நடிகராக வேண்டும் என எண்ணினார். இவரது குரல் வளத்தை
கேட்ட சக கலைஞர்கள், நீங்கள் ஏன் கவிதைகள் எழுதக்கூடாது என கேட்டனர்; இதனை
சீரியசாக எடுத்துக்கொண்ட ஆண்டர்சன் அதில் முழு ஈடுபாட்டை செலுத்தினார்.
பின் குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் எழுதுவதில் வல்லவராக
திகழ்ந்தார். இவரது கதை புத்தகங்கள் 125 மொழிகளில்,
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது கதைகளை தழுவி, அனிமேஷன் திரைப்படங்களும்
வெளியாகின.
சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான புத்தங்கள் எழுதுவதில் சிறந்து
விளங்குபவர்களுக்கு, அச்சடிக்கும் பதிப்பகங்களுக்கு, இரண்டு ஆண்டுக்கு ஒரு
முறை "எச்.சி.ஆண்டர்சன் விருது", ஐ.பி.பி.ஒய்., அமைப்பு சார்பில்
வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment