தமிழக சட்டசபையில் விதி எண் 110 -ன் கீழ் முதல்வர்
ஜெயலலிதா பேசியதாவது, தமிழகத்தில் மேலும் 4 அறிவியல் மற்றும் கலை
கல்லூரிகள் துவங்கப்படும். சென்னையில் உலக செஸ் சாம்பியன் ஷிப் தொடர் வரும்
நவம்பரில் சென்னையில் நடக்கிறது. இந்த போட்டிக்காக தமிழக அரசு சார்பில்
ரூ. 29 கோடி நிதி ஒதுக்கப்படும்.
மாணவர்கள் கல்வி தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய
மதுரை, கோவை, திருச்சியில் ரூ. 30 கோடியில் அண்ணா பல்கலை., மண்டல மையங்கள்
அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் அருகே செய்யாறில் அரசு
பாலிடெக்னிக் துவங்கப்படும். திண்டுக்கல், ராமநாதபுரம், நாகர்கோவில் ஆகிய
நகரங்களில் மாணவர்கள் விடுதிகள் கட்டப்படும்.
No comments:
Post a Comment