ஊதிய முரண்பாடு தொடர்பான, மூவர் குழு அறிக்கையை
அரசுக்கு சமர்ப்பித்தும், அதை வெளியிட தாமதம் செய்வதை கண்டித்து, மே 4 ல்
அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த, அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு
செய்துள்ளது.
சட்டசபை தேர்தலின் போது, அரசு ஊழியர்களின்
முரண்பாடுகள் களையப்படும் என, முதல்வர் ஜெ., வாக்குறுதி வழங்கினார்.
அதன்படி, சம்பள முரண்பாடு களைய, கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தலைமையில் மூவர் குழு
அமைக்கப்பட்டது. குழுவானது, அரசு ஊழியர்கள் சங்கங்கள், அமைப்புகளிடம்
கருத்துக்கள் கேட்டு, அதன் அறிக்கையை 2012 டிச., 31 ல் அரசுக்கு வழங்கியது.
இதை எதிர்பார்த்து, எட்டு லட்சம் அரசு ஊழியர்கள், 4 லட்சம் ஆசிரியர்கள்
காத்திருக்கின்றனர். ஆனால் அரசு, அறிக்கையை வெளியிடாமல் தாமதம் செய்கிறது.
இதை கண்டித்து, தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், பல போராட்டங்கள்
நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்
நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஏப்., 17 ல் மாலை நேர தர்ணா போராட்டம்
நடக்க உள்ளது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ,"" சம்பள
முரண்பாடு குறித்த, குழு அறிக்கையை, வெளியிடாமல் அரசு தாமதம் செய்கிறது.
இதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டும், அரசு மெத்தனமாக உள்ளது.
திருவாரூரில் மே 4 ல் நடக்க உள்ள மாநில பேரவையில், அடுத்த கட்ட போராட்டத்தை
தீவிரப்படுத்த, முடிவு எடுக்கப்படும்,''என்றார்.
No comments:
Post a Comment